sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலை மைய தடுப்புகளுக்கு வண்ணம் பூசி அழகு சேர்ப்பு

/

சாலை மைய தடுப்புகளுக்கு வண்ணம் பூசி அழகு சேர்ப்பு

சாலை மைய தடுப்புகளுக்கு வண்ணம் பூசி அழகு சேர்ப்பு

சாலை மைய தடுப்புகளுக்கு வண்ணம் பூசி அழகு சேர்ப்பு


ADDED : மே 06, 2025 11:47 PM

Google News

ADDED : மே 06, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.கே., நகர், சென்னை மாநகரை அழகுபடுத்தும் விதமாக, மின்மாற்றிகளைச் சுற்றி வண்ண தடுப்புகள், சாலையோர பூங்கா சீரமைப்பு, மேம்பாலங்களில் செடிகள் வளர்ப்பு உள்ளிட்ட பணியை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சாலையின் மைய தடுப்புகளும் வண்ணப்பூசப்பட்டு அழகுபடுத்தப்படுகிறது.

இதற்காக, 'ப்ரீகாஸ்ட்' எனும் முன்கூட்டியே தொட்டி வடிவில் தயாரிக்கப்படும் கான்கிரீட் கட்டுமானத்தை கொண்டு, தேவையான இடத்தில் சாலை மைய தடுப்பு அமைக்கப்படுகிறது. அதில் வண்ணமும் பூசப்படுகிறது. அதன் நடுவே மண் கொட்டி, செடிகள் நட்டு பராமரிக்கப்படுகிறது.

கோடம்பாக்கம் மண்டலத்தில் கே.கே., நகர் ஆர்.கே., சண்முகம் சாலை, ராஜமன்னார் சாலை உள்ளிட்ட பகுதியில், இந்த வகை சாலை மைய தடுப்புகள் அமைத்துள்ளது, பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இந்த வகை சாலை மைய தடுப்புகளை பராமரிப்பது எளிது. செடிகளையும் முறையாக வளர்க்க முடியும்' என்றனர்.






      Dinamalar
      Follow us