ADDED : நவ 12, 2024 12:38 AM
v ஆதார் அட்டை பெற பயனாளிகள் அவதி
அம்பத்துார் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் அட்டை முகாம் நடக்கிறது. இதற்கான படிவம், காலை 9:30 மணிக்கு தான் தருகின்றனர். தினமும், 50 நபர்களுக்கே படிவம் கொடுக்கின்றனர். ஆனால், 'ஆதார்' தொடர்பான பிரச்னைக்கு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். படிவம் 9:30 மணிக்கு கொடுக்கப்பட்டாலும், அதற்காக பொதுமக்கள் காலை 6:00 மணி முதலே வந்து வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, அங்கு நான்கு இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. இதனால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் கால்கடுக்க நிற்க வேண்டியுள்ளது. மேலும், ஆண், பெண் இருபாலருக்கும் உள்ள கழிப்பறைகளும் கடும் துர்நாற்றத்துடன் காணப்படுகின்றன. எனவே, அஞ்சல் துறை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-- அ.சுபா, அம்பத்துார்.

