/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திடீரென தரையிறங்கிய பெங்களூரு விமானம்
/
திடீரென தரையிறங்கிய பெங்களூரு விமானம்
ADDED : செப் 18, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7:05 மணிக்கு, பெங்களூரு செல்ல வேண்டிய 'இண்டிகோ' விமானம், தாமதமாக இரவு 7:50 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 165 பேர் இருந்தனர்.
விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமானி தகவல் தெரிவிக்க, அதிகாரிகள் விமானத்தை மீண்டும் சென்னையில் தறையிறக்க அறிவுறுத்தினர். இதையடுத்து, விமானம் இரவு 8:30 மணிக்கு சென்னையில் தறையிறங்கியது. பழுது பார்க்க முயற்சித்தும் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து, இரவு 10:00 மணிக்கு மாற்று விமானத்தில் பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர்.