/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பென்ஸ்'ஷோரூம் அடையாறில் துவக்கம்
/
'பென்ஸ்'ஷோரூம் அடையாறில் துவக்கம்
ADDED : ஜூலை 01, 2025 12:21 AM

சென்னை, 'மெர்சிடிஸ் பென்ஸ்' விற்பனை மையம் அடையாறில் துவக்கப்பட்டுள்ளது.
சொகுசு கார்களை உற்பத்தி செய்யும் ஜெர்மனியின், 'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், ஆடம்பர டிஜிட்டல் வசதிகளுடன் அதன் புதிய விற்பனை மையத்தை, அடையாறு கஸ்துார்பா நகரில் துவக்கி உள்ளது.
இந்த விற்பனை மையம், 7,500 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் மின்சார கார்கள் விற்பனை, கடந்தாண்டை ஒப்பிடுகையில், 73 சதவீதம் உயர்ந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, 'இ.க்யூ.எஸ்., செடான் செலிப்ரேஷன் எடிஷன்' என்ற மின்சார காரை காட்சிப்படுத்தியது.
'இ.க்யூ.எஸ்., 580 செடான்' மின்சார காரை ஒப்பிடுகையில், இந்த புதிய எடிஷன் காரில், பின்புற பயணியருக்கான சொகுசு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன.
அதாவது, பின்புற சிட்களுக்கு மசாஜ் வசதி, லம்பர் சப்போர்ட் மற்றும்38 டிகிரி ரிக்லைன் வசதி, முன்புற சீட்களை நகர்த்த பாஸ் மோட் வசதி உள்ளிட்டவை புதிதாக வழங்கப்பட்டுள்ளன.
மேலும், விலை உயர்ந்த நெப்பா லெதரால் ஆன உட்புற சீட்கள், புதிய சீட் பக்கிள் மற்றும் பென்ஸின் ரியாலிட்டி நேவிகேஷன் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில், இதுவரை நாடு முழுதும், 11 விற்பனை மையங்கள் துவங்கப்பட்டுள்ள நிலையில், மேலும், 19 மையங்கள் திறக்கப்பட உள்ளன.