/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' பெர்ட்ரம் ' கோப்பை போட்டிகள் துவக்கம்
/
' பெர்ட்ரம் ' கோப்பை போட்டிகள் துவக்கம்
ADDED : ஆக 16, 2025 01:23 AM
சென்னை, பள்ளிகள், கல்லுாரிகள் பங்கேற்கும் லயோலா கல்லுாரியின் ' பெர்ட்ரம்' கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், நுங்கம்பாக்கத்தில் நேற்று துவங்கின.
லயோலா கல்லுாரியின் நிறுவனர் 'பெர்ட்ரம்' நினைவு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், 91வது ஆண்டாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நேற்று காலை துவங்கின.
கல்லுாரியின் முன்னாள் மாணவரும், தேசிய வாலிபால் வீரருமான தேசிங்குராஜன், போட்டியை துவக்கி வைத்தார்.
இதில், 16 பள்ளிகள், 53 கல்லுாரி அணிகள் பங்கேற்கின்றன. நாக் அவுட் மற்றும் லீக் முறையில், 31ம் தேதி வரை, போட்டிகள் நடக்கின்றன.
கல்லுாரிகளுக்கு இடையே வாலிபால், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், கோ - கோ உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன.
சிறப்பு போட்டியாக, மாற்றுத்திறனாளிகளுக்கு வாலிபால் மற்றும் செஸ் போட்டிகள் நடக்கின்றன. பள்ளி அளவில் வாலிபால் மற்றும் கூடைப்பந்து போட்டிகள் நடக்கின்றன.

