/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கண்காணிப்பு வளையத்தில் பெசன்ட் நகர் கடற்கரை
/
கண்காணிப்பு வளையத்தில் பெசன்ட் நகர் கடற்கரை
ADDED : பிப் 22, 2026 06:19 AM
பெசன்ட்நகர்: பெசன்ட் நகர் கடற்கரையில், பொதுமக்கள் பங்க ளிப்பில் அமைக்கப்பட்ட 38 கண்காணிப்பு கேமராக்கள், நேற்று திறக்கப்பட்டன.
பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணியரிடம் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுக்கும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க, காவல்துறை முடிவு செய்தது.
அதன்படி, வியாபாரிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பில், 10 லட்சம் ரூபாயில் பெசன்ட் நகர் கடற்கரையில் 34 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.
இதை, தெற்கு வட்டார காவல் இணை கமிஷனர் கல்யாண் பார்வையிட்டு, கேமரா பதிவுகளை துவக்கி வைத்தார்.
அடையாறு காவல் உதவி கமிஷனர் முருகேசன், ஆய்வாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கேம ராக்களின் பதிவுகளை கண்காணிக்க, பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள காவல் மையத்தில் மானிட்டர் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அவர்களது மொபைல் போனில், பதிவுகளை பார்க்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

