/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறந்த பள்ளி மேலாண்மை குழு திருவொற்றியூர் பள்ளி அசத்தல்
/
சிறந்த பள்ளி மேலாண்மை குழு திருவொற்றியூர் பள்ளி அசத்தல்
சிறந்த பள்ளி மேலாண்மை குழு திருவொற்றியூர் பள்ளி அசத்தல்
சிறந்த பள்ளி மேலாண்மை குழு திருவொற்றியூர் பள்ளி அசத்தல்
ADDED : ஜன 25, 2024 12:50 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர் - ராமநாதபுரம் சென்னை நடுநிலைப் பள்ளியில், 1 - 8 ம் வகுப்பு வரை, 550 பள்ளி மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியில், லீமாரோஸ் தலைமையில், கவுன்சிலர் ஜெயராமன், சாமுவேல் திரவியம் உட்பட 20 பேர் இடம் பெற்றுள்ள பள்ளி மேலாண்மை குழு செயல்பட்டு வருகிறது.
பள்ளியின் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, வகுப்பறை பராமரிப்பு, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கூடுதல் ஆசிரியர்களுக் கு சம்பளம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் இக்குழுவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படுகிறது.
தேசிய திறனாய்வு தேர்விற்கு தயாராகும், எட்டாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு மாலையில் சிற்றுண்டி வழங்குதல், இடைநிற்றல் மற்றும் அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு அறிவுரை வழங்கி, கல்வியை தொடர செய்வது உள்ளிட்ட பணிகளையும் இக்குழுவினர் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், 2022 - 23 ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி மேலாண்மை குழு விருது, திருவொற்றியூர். ராமநாதபுரம் சென்னை நடுநிலைப்பள்ளிக்கு கிடைத்துள்ளது.
சென்னை, நந்தம்பாக்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் லீமாரோஸ், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இவ்விருதை பெற்றுக் கொண்டார்.