/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி மாணவர்கள் நடத்திய பாரத கானம்
/
பள்ளி மாணவர்கள் நடத்திய பாரத கானம்
ADDED : ஜன 12, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்விவேகானந்தா கல்வி குழுமத்தின் பொன் விழாவை முன்னிட்டு, விவேகானந்தரின் பிறந்த நாளான நேற்று, மாணவர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் விதமாக, 1,000 மாணவர்கள், ஒரே மேடையில் பங்கேற்ற பாரத கானம் நிகழ்ச்சி, தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லுாரியில், நேற்று நடந்தது.
மாணவ - மாணவியர் பல்வேறு மொழிகளில் தேச பக்தி பாடல்களை பாடி அசத்தினர். ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் அதிகாரியும், விவேகானந்தா கல்வி குழுமத்தின் தலைவருமான கோபாலசுவாமி, திரைப்பட பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன், கல்வி குழுமத்தின் செயலர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர், பெற்றோர் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.