தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உரத்த சிந்தனை சங்கம் நடத்திய 'பாரதி உலா' நிகழ்ச்சி நிறைவு

 உரத்த சிந்தனை சங்கம் நடத்திய 'பாரதி உலா' நிகழ்ச்சி நிறைவு

 உரத்த சிந்தனை சங்கம் நடத்திய 'பாரதி உலா' நிகழ்ச்சி நிறைவு


ADDED : பிப் 23, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் 'நம் உரத்த சிந்தனை' தமிழ் மாத இதழ் சார்பில், 'பாரதி உலா - 2025' நிறைவு விழா மற்றும் விருது வழங்கும் விழா, சென்னை, கோட்டூர்புரத்தில் நேற்று நடந்தது.

இதில், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு, 'பாரதி பணிவேந்தர் விருது' வழங்கப்பட்டது. விருதை, 'தினமணி' நாளிதழ் ஆசிரியர் கி.வைத்தியநாதன் வழங்கி, பேசியதாவது:

நுாறாண்டுகள் கடந்தும், பாரதியை நாம் போற்றுகி றோம். விருதுகள் மீது எனக்கு உடன்பாடு இல்லை. பாரதிக்கு எந்த விருதும் வழங்கப் படவில்லை. ஆனாலும், பாரதி கொண்டாடப்படுகிறார்.

பாரதி காலத்தில் விருது பெற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் குறித்து பேசுவதும் இல்லை; நினைப்பதும் இல்லை. விருதுகளை விட, சாதனைகள் பெரிது.

தமிழ் இலக்கியத்தையும், தமிழ் சமுதாயத்தையும் பாரதிக்கு முன், பாரதிக்கு பின் என பிரிக்கலாம். பாரதியை ஒதுக்கிவைத்து சமுதாயத்தில் எதுவும் செய்ய முடியாது.

இந்த விழா பாரதியை பெருமைப்படுத்துவதற்காக அல்ல. பாரதியை மீண்டும், மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது.

அரசியல் தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள், தனவந்தர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், சமுதாயம் அவர்களையெல்லாம் மறந்துவிடும். கவிஞர்களுக்கு மரியாதை கொடுக்கும் சமுதாயமே சிறந்த சமுதாயம்.

அந்தவிதத்தில் தமிழகம் தோற்று போயுள்ளது. ஏன் இந்தியாவே தோற்று போயுள்ளது. தலைசிறந்த கவிஞர்களை நாம் கொண்டாடுவதில்லை. பாரதியார் இறந்து பல ஆண்டுகள் கழித்தே அவருக்கு மரியாதை கிடைத்தது.

அதற்காக அவரது குடும்பம் அயராது உழைத்தது. பாரதியை இன்றளவும் உயர்த்தி பிடித்து கொண்டாடும் முயற்சிக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், 'ஸ்ரீராம் சமாஜ்' அமைப்பின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, 'தபம்ஸ்' குரூப்ஸ் நிர்வாக இயக்குநர் மேகநாதன், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், கோவை யுனைடெட் கல்லுாரி முதல்வர் விஜயா, 'ஸ்ருதிலய' இசை நடனப்பள்ளி முதல்வர் பார்வதி பாலசுப்பிரமணியன், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், ஓவியர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரதி உலா நிகழ்ச்சி, கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் துவங்கி, சென்னையில் நேற்று நிறைவடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us