/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஸ்ரீராம்' நிறுவன குழுமத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா
/
'ஸ்ரீராம்' நிறுவன குழுமத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா
'ஸ்ரீராம்' நிறுவன குழுமத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா
'ஸ்ரீராம்' நிறுவன குழுமத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா
ADDED : பிப் 02, 2025 12:45 AM

தி.நகர்,'ஸ்ரீராம்' நிறுவனங்களின் அங்கமான, ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகம் சார்பில், பாரதியாரின் 143வது பிறந்த நாள் விழா, தி.நகர் கிருஷ்ண கான சபாவில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதில், உயர் நீதிமன்ற நீதிபதி நக்கீரன் பங்கேற்று, மகாகவி பாரதியார் புகழ் பரப்பி வரும், பேராசிரியர் கிருங்கை சேதுபதி, கவிஞர் கலைமணி, பேராசிரியர் மகேந்திரன் ஆகியோருக்கு, 'பாரதி அறிஞர்' விருது மற்றும் பொற்கிழி வழங்கினார்.
கவிதா ஜவஹர் 'பாரதிரப் பாடிய பாரதி' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அத்துடன், அவ்வை நடராஜன் எழுதியுள்ள அணிந்துரைகளை, அவரது மகன் அவ்வை அருள் தொகுத்துள்ளார்.
அவ்வையின் தமிழமுது' என்ற அந்த நுாலை நீதிபதி நக்கீரன் வெளியிட, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார். நிகழ்வில், பாரதி ஆய்வாளர் சீனி விஸ்வநாதன் மற்றும் நல்லி குப்புசாமி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழக அமைப்பாளர் அவ்வை அருள், தலைவர் சுந்தரேசன், டில்லி தமிழ் சங்க பொது செயலர் முகுந்தன், டாக்டர் பால சாண்டில்யன், பொன்னேரி பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.