/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு மயிலாப்பூரில் பூமி பூஜை
/
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு மயிலாப்பூரில் பூமி பூஜை
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு மயிலாப்பூரில் பூமி பூஜை
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு மயிலாப்பூரில் பூமி பூஜை
ADDED : ஏப் 25, 2025 11:54 PM
சென்னை, சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை கட்டுவதற்கான பூமி பூஜை, நேற்று முன்தினம் நடந்தது.
தனலட்சுமி சீனிவாசன் குழும நிறுவனர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இம்மருத்துவமனையில், 250க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன், 24 மணி நேரமும், விபத்து மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது.
பல்வேறு உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகள் அமைய உள்ளதால், அனைத்து விதமான நோய்கள் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கு, உலக தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
பூமி பூஜையில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலை இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், பல்கலை வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் நகுலன், நீவாணி, குழும செயலர் நீலராஜ், அறக்கட்டளை உறுப்பினர் ராஜ பூபதி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
***