ADDED : ஜன 03, 2025 11:23 PM

விலை நிலங்களாக
மாறிய விளை நிலங்கள்
ஆசிரியர்: கே.ஆர்.பி.மணிமொழிச்செல்வன்
பக்கம்: 186, விலை: ரூ.220
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது' என்பது பழமொழி. முப்போகம் விளைந்த நன்செய் நிலங்கள், நிரம்பிய வாய்க்கால்கள் அடைத்து, சாக்கடை கால்வாயாகி, புன்செய் நிலமாகி பின், விலை நிலமாவதையும், உணவுக்கான எதிர்காலத்தையும் விளக்குகிறது.
புத்தர் இன்றும் சிரிக்கிறார்
ஆசிரியர்: ந.வினோத்குமார்
பக்கம்: 138, விலை: ரூ. 160
வெளியீடு: காக்கைக்கூடு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ளது இந்நுால். 'புத்தர் இன்றும் சிரிக்கிறார்' என்ற கட்டுரை, பொக்ரான் குண்டுவெடிப்பை பற்றிய அறிமுகம், அது வளர்ந்த நாடுகளில் ஏற்படுத்திய தாக்கம், அணுகுண்டு தொழில்நுட்பத்தின் விளைவு குறித்து அலசுகிறது.
---துலிப் மலர்களின் கதைகள்
ஆசிரியர்: கவிதா முரளிதரன்
பக்கம்: 80, விலை: ரூ. 100
வெளியீடு: காலநிலை
காட்டை காக்க மாசை இனப்பெண்கள், நிலத்தை காக்க ஈகுவடார் பெண்கள் நடத்திய போராட்டம், அவற்றை முன்னெடுக்கக் காரணமாக, பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் அலசும் கட்டுரைகள் உள்ளன.

