/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்களுக்கு பீஹார் எம்.பி., ஆதரவு முதல்வரிடமும் மனு வழங்கினார்
/
துாய்மை பணியாளர்களுக்கு பீஹார் எம்.பி., ஆதரவு முதல்வரிடமும் மனு வழங்கினார்
துாய்மை பணியாளர்களுக்கு பீஹார் எம்.பி., ஆதரவு முதல்வரிடமும் மனு வழங்கினார்
துாய்மை பணியாளர்களுக்கு பீஹார் எம்.பி., ஆதரவு முதல்வரிடமும் மனு வழங்கினார்
ADDED : டிச 17, 2025 05:16 AM
அம்பத்துார்: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக, பீஹாரைச் சேர்ந்த மா.கம்யூ., - எம்.பி., மனு வழங்கினார்.
அம்பத்துார், கல்யாணபுரம் பகுதியில் உள்ள, உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில், ராயபுரம் மற்றும் திரு.வி.க., நகர் மண்டலத்தைச் சேர்ந்த, நான்கு பெண் துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உடல்நல குறைவால் நான்கு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அதே மண்டலத்தைச் சேர்ந்த வேறு நான்கு பெண் துாய்மை பணியாளர்கள் இரண்டாம் கட்ட உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.
அதில், உடல்நல குறைவால், இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கல்பனா, 39 மற்றும் வேளாங்கண்ணி, 40 ஆகிய இரு துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், பீஹாரைச் சேர்ந்த மா.கம்யூ., - எம்.பி., ராஜாராம் சிங், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் துாய்மை பணியாளர்களை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின், அவர், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, மனு வழங்கினார். அதில், 'இந்த பிரச்னையில் அதிகாரிகள் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், முதல்வர் இதற்கு தீர்வு காண வேண்டும்' என, துாய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இரண்டு மண்டலங்களிலும் பணியாற்றிய, 1,400 துாய்மை பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த முதல்வர் உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிடப் பட்டுள்ளது.

