ADDED : ஜூலை 14, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கோஷ்பூர் ஆலன், 20. இவர், திருமுல்லைவாயில், மணிகண்டபுரத்தில் தங்கி, மழைநீர் வடிகால் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம், அதே பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மது போதையில் வந்த இருவர், வழிவிட சொல்லி தகராறில் ஈடுபட்டு, அவரை உருட்டு கட்டையால் தாக்கினர்.
உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலையில் எட்டு தையல் போடப்பட்டது.
விசாரித்த திருமுல்லைவாயில் போலீசார், தகராறில் ஈடுபட்ட ஆவடி, பொத்துாரைச் சேர்ந்த கார்த்திக், 29, மற்றும் மணி சங்கர், 25, ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.