/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் திருடர்கள் மெரினாவில் சிக்கினர்
/
பைக் திருடர்கள் மெரினாவில் சிக்கினர்
ADDED : ஆக 18, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மெரினா கடற்கரை அணுகு சாலையில், நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ., பத்மநாபன் மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்களை, போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அப்போது, இருவரும் மது போதையில் இருப்பது தெரிந்தது. விசாரணையில், இருவரும் பல்லாவரம் பகுதியில் திருடிய இருசக்கர வாகனத்துடன் வந்தது தெரியவந்தது .
இதையடுத்து, இருவரையும், பல்லாவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ருக்மணியிடம், இருசக்கர வாகனத்துடன் ஒப்படைத்தனர். இதையடுத்து, இருவரிடமும் விசாரணை நடக்கிறது.