தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ லாரியில் மோதி பைக்கில் சென்றவர் பலி

 லாரியில் மோதி பைக்கில் சென்றவர் பலி

 லாரியில் மோதி பைக்கில் சென்றவர் பலி


ADDED : ஏப் 22, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மணலி புதுநகர்: திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சுரேஷ், 40; லாரி ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு, மணலியில் இருந்து மீஞ்சூர் நோக்கி, பொன்னேரி நெடுஞ்சாலையில், தனது 'எமகா ஆர்1' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

மணலிபுதுநகர் அடுத்த நாப்பாளையம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பைக் நிலை தடுமாறி, முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சுரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சுரேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போக்குவரத்து போலீசார், விபத்தில் தொடர்புடைய கன்டெய்னர் லாரி ஓட்டுநர் ரகுராமை பிடித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us