/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணம் கொடுக்கல் -- வாங்கலில் இருதரப்பு மோதல்: மூவர் கைது
/
பணம் கொடுக்கல் -- வாங்கலில் இருதரப்பு மோதல்: மூவர் கைது
பணம் கொடுக்கல் -- வாங்கலில் இருதரப்பு மோதல்: மூவர் கைது
பணம் கொடுக்கல் -- வாங்கலில் இருதரப்பு மோதல்: மூவர் கைது
ADDED : டிச 08, 2025 05:45 AM
செம்பியம்: பணம் கொடுக்கல் -வாங்கலில் ஏற்பட்ட மோதலில், இருதரப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூர், துளசிங்கம் தெருவைச் சேர்ந்த தமிழரசன், 20; தனியார் கல்லுாரி மாணவர். இவர், தன் நண்பரான லிபின் ப்ளோரா, 23, என்பவருக்கு, கடந்த மாதம் 1.45 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.
அந்த கடனை திரும்ப கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால், பணத்தை சில நாட்களுக்கு முன் திருப்பி கொடுத்த லிபின் ப்ளோரா, கடந்த 5ம் தேதி தன் உறவினர்களை தமிழரசன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு, தமிழரசன் மற்றும் அவரது தந்தை ராஜேஷ், 44, மற்றும் பாட்டி கல்யாணி, 61, ஆகியோருடன், லிபின் ப்ளோரா மற்றும் அவரது உறவினர்கள் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் இரு தரப்புக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு மீதும் செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து, பகவதி, 22, தமிழரசன், 20, சூர்யா பிரகாஷ், 21, ஆகியோரை, கைது செய்தனர்.

