/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாட்டம்
/
நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : மே 06, 2025 11:33 PM
திருவொற்றியூர், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் பிறந்த நாளையொட்டி நடந்த விழாக்களில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சமத்துவ மக்கள் கழக தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் ஏ.நாராயணன், 69 பிறந்த நாள் விழா, நேற்று முன்தினம் கொண்டாப்பட்டது.
இதையொட்டி, அவரது வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினர். அமைச்சர் சி.வி.கணேசன், வீட்டிற்கு சென்று வாழ்த்தினார்.
தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரி சங்கம் சார்பில் நடந்த ரத்த தான முகாமை, அமைச்சர்கள் சேகர்பாபு, கீதாஜீவன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
நேற்று முன்தினம் காலை, எர்ணாவூர் வியாபாரி சங்கம் சார்பில், இளைஞரணி செயலர் காத்திக் தலைமையில், பொதுமருத்துவ முகாம் நடந்தது.
மாலையில், எர்ணாவூர் நாடார் உறவின் முறை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா, எர்ணாவூர் பஜாரில் நடந்தது.
இதில், ஆறு பேருக்கு தையல் இயந்திரம், 669 பேருக்கு சேலை, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக, எர்ணாவூர் ஏ.நாராயணனுக்கு, 7 அடி உயர வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.
இதில், கட்சியின் துணை பொது செயலர்கள் பிரபு, விநாயகமூர்த்தி, பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
***