ADDED : ஜன 25, 2024 12:44 AM
கோட்டூர்புரம்கோட்டூர்புரம், பாரதி அவென்யூவைச் சேர்ந்தவர் தேவி. இவருடன் அவரது தங்கையும், பா.ஜ., மாவட்ட துணைத் தலைவருமான ஆண்டாள், 42, என்பவர் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை தேவி வீட்டிற்கு, பா.ஜ.,வினர் சிலர் வந்தனர். அப்போது, 'சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்க, ஆட்களை அழைத்து வருவதாகக் கூறி 50,000 ரூபாய் வாங்கினாய். ஆட்களை அழைத்து வராததால், பணத்தை திருப்பிக் கொடு' எனக் கூறி, ஆண்டாளை தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த ஆண்டாள், சிகிச்சை பெற்று, கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, பா.ஜ. நிர்வாகி ஸ்ரீதர், 42, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில், பா.ஜ. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, பெண் நிர்வாகிகள் நிவேதா, கஸ்துாரி உள்ளிட்டோர் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.