/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் குறித்து அவதுாறு: பா.ஜ., பிரமுகர் கைது..
/
முதல்வர் குறித்து அவதுாறு: பா.ஜ., பிரமுகர் கைது..
ADDED : பிப் 17, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.நகர்: முதல்வர் ஸ்டாலின் குறித்து, அவதுாறாக பேசியதாக, பா.ஜ., பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
பா.ஜ., சார்பில், கடந்த 13ம் தேதி, வியாசர்பாடி, 13வது மத்திய குறுக்கு தெருவில் தெருமுனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வியாசர்பாடி காந்தி நகரைச் சேர்ந்த, கட்சியின் செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான கண்ணன், 45, பேசினார். அப்போது, முதல்வர் குறித்து அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, திருநெல்வேலி சென்றிருந்த கண்ணனை, அங்கு தேடிச் சென்று கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.