/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கட் அவுட்'டால் விபத்து போலீசில் பா.ஜ., புகார்
/
'கட் அவுட்'டால் விபத்து போலீசில் பா.ஜ., புகார்
ADDED : மார் 16, 2025 10:23 PM
சென்னை:'கட் அவுட் விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., போலீசில் புகார் அளித்துள்ளது.
தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மாநில நிர்வாகி மணி, உள்துறை செயலர், டி.ஜி.பி., உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள புகார்:
கடந்த, 13ம் தேதி, திருவள்ளூரில் நடந்த கண்டன பொதுக்கூட்டம் ஒன்றில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவரையும், துணை முதல்வர் உதயநிதியையும் வரவேற்று, ராட்சத பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன.
உதயநிதி படம் இடம் பெற்று இருந்த கட் அவுட், ஆட்டோ மீது விழுந்து, பயணியர் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பி உள்ளனர்.
கடந்த, 2019ல், அ.தி.மு.க., ஆட்சியில் ராட்சத பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற மென்பொறியாளர் பலியானார். தற்போது, தி.மு.க., ஆட்சியிலும், சட்ட விரோத பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்படுகின்றன.
ஏற்கனவே, சட்டவிரோத பேனர், ராட்சத கட் அவுட்களை, சாலை ஓரங்களில் அரசியல் கட்சியினர் வைக்க கூடாது என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பேனர் விழுந்து விபத்து ஏற்பட காரணமாக இருந்த நபர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.