/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரு நம்பர் லாட்டரி விற்ற பா.ஜ., பிரமுகர் கைது
/
ஒரு நம்பர் லாட்டரி விற்ற பா.ஜ., பிரமுகர் கைது
ADDED : செப் 05, 2025 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜமங்கலம், ஒரு நம்பர் லாட்டரி விற்ற பா.ஜ., பிரமுகர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
வில்லிவாக்கம் பாரதி நகரில், ஒரு நம்பர் லாட்டரி விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அங்கு, மொபைல்போன்கள் வாயிலாக ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 50, கோதண்டம், 45, ஆகியோரை, ராஜமங்கலம் போலீசார் கைது செய்து, மூன்று மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர். வெங்கடேசன், பா.ஜ.,வில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணை தலைவராக உள்ளார்.