/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணினி வழியில் தேர்வு எழுதி பார்வையற்ற மாணவன் தேர்ச்சி
/
கணினி வழியில் தேர்வு எழுதி பார்வையற்ற மாணவன் தேர்ச்சி
கணினி வழியில் தேர்வு எழுதி பார்வையற்ற மாணவன் தேர்ச்சி
கணினி வழியில் தேர்வு எழுதி பார்வையற்ற மாணவன் தேர்ச்சி
ADDED : மே 09, 2025 01:02 AM
பூந்தமல்லி, பூந்தமல்லியில், பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 120 மாணவர்கள் பயில்கின்றனர்.
இங்கு, ஆனந்த் என்ற மாணவர், மாநில பாடத்திட்டத்தில் படித்து, தமிழகத்தில் முதல் முறையாக, கணினி வழியில் பிளஸ் 2 பொது தேர்வு எழுதினார். வழிகாட்டி என்ற ஸ்கிரைப் வினாக்களை படித்து, ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு செய்து ஆனந்த் தேர்வு எழுத்தினார்.
இந்நிலையில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், 486 மதிப்பெண் பெற்று ஆனந்த் தேர்ச்சி பெற்றார்.
இந்த பள்ளியில் பிளல் 2 தேர்வு எழுதிய 17 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதால், இந்த பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.