/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதையில் தடுப்பு கற்கள் காமராஜர் சாலையில் விபத்து அபாயம்
/
நடைபாதையில் தடுப்பு கற்கள் காமராஜர் சாலையில் விபத்து அபாயம்
நடைபாதையில் தடுப்பு கற்கள் காமராஜர் சாலையில் விபத்து அபாயம்
நடைபாதையில் தடுப்பு கற்கள் காமராஜர் சாலையில் விபத்து அபாயம்
ADDED : ஜன 08, 2024 01:40 AM

மெரினா:காமராஜர் சாலையில், அடிக்கடி விபத்து ஏற்படும் நிலையில், தடுப்பு கற்களை நடைபாதையில் வைத்துள்ளதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சென்னை, மெரினா, காமராஜர் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது. மெரினாவுக்கு வரும் பொதுமக்கள், சர்வீஸ் சாலையில் இருந்து, காமராஜர் சாலையை அதிக அளவில் கடந்து செல்கின்றனர்.
சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், விபத்து ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்படும்.
சில மாதங்களுக்கு முன், இந்திய கடற்படையில் பணிபுரியும் வீரர் ஒருவர், தன் கர்ப்பிணி மனைவியை நடைபயிற்சிக்காக மெரினாவுக்கு அழைத்து வந்தார்.
பின், அவரது இருசக்கர வாகனத்தில் மனைவியை அமர வைத்து, காமராஜர் சாலையை கடக்க முயற்சித்தார்.
அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், கர்ப்பிணி மனைவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபோன்று விபத்துகள் அடிக்கடி காமராஜர் சாலையில் நடப்பது வழக்கம். விபத்தை தடுப்பதற்காக காமராஜர் சாலை,'நம்ம சென்னை செல்பி பாயின்ட்' அருகே தடுப்புக்காக கற்கள் வைத்திருந்தனர்.
ஆனால், இந்த தடுப்பு கற்கள் தற்போது அங்கிருந்து எடுக்கப்பட்டு, நடைபாதையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனால், வாகனங்கள் அந்த பகுதியில் தறிகேட்டுச் செல்வதால், மீண்டும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தடுப்பு கற்களை மீண்டும் பழைய இடத்திலேயே வைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.