தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/புளூ ஸ்டார் நிறுவனம் புது 'ஏசி'கள் அறிமுகம்

புளூ ஸ்டார் நிறுவனம் புது 'ஏசி'கள் அறிமுகம்

புளூ ஸ்டார் நிறுவனம் புது 'ஏசி'கள் அறிமுகம்


ADDED : மார் 06, 2024 12:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 12:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,புளூ ஸ்டார் நிறுவனம் கோடைக்காலத்தை முன்னிட்டு, குறைந்த விலை மற்றும் ஒரு, 'பிளாக் ஷிப், பிரீமியம்' உட்பட, புதிய, 'ஏசி' சாதனங்களின் விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனம் இன்வெர்ட்டர், நிலையான வேகம், 'வின்டோ ஏர் கண்டிஷனர்'கள் ஆகியவற்றின் வரம்பு முழுதும், ஒவ்வொரு நுகர்வோர் பிரிவையும் பூர்த்தி செய்ய, எல்லா விலையிலும், 100க்கும் மேற்பட்ட 'மாடல்'களை அறிமுகம் செய்துள்ளது.

'இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி' பிரிவில் புளூ ஸ்டார் நிறுவனம், 2 ஸ்டார், 3 ஸ்டார், 5 ஸ்டார் வகைகளில் பிளாக் ஷிப், பிரீமியம், குறைந்த விலை ஆகியவை அடங்கிய மூன்று வகைகளை அறிமுகம் செய்துள்ளது.

அவை, 29,990 ரூபாய் முதல், கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும்.

இந்நிறுவனம், 'சூப்பர் எனர்ஜி எபிஷியன்ட் ஏசி' சாதனம், 'ஹெவி டூட்டி ஏசி' சாதனம், 'ஸ்மார்ட் வைபை ஏசி' சாதனம், 'ஹாட் அண்டு கோல்டு ஏசி' மற்றும் 'ஆன்டி வைரஸ்' தொழில்நுட்பம் உடைய 'ஏசி'கள் ஆகியவற்றை உள்ளடக்கிய முன்னணி மாடல்களில் அறிமுகப்படுத்தி உள்ளது.

பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில், 80வது ஆண்டு சிறப்பு பதிப்பு ஏர் கண்டிஷனரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மாடல், நாட்டில் கிடைக்கக்கூடிய அதிநவீன ஏர் கண்டிஷனராக, விரிவான தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆற்றல் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us