/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்பத்துார் 'மெகா' பள்ளம் சீரமைப்பு பணியில் வாரியம்
/
அம்பத்துார் 'மெகா' பள்ளம் சீரமைப்பு பணியில் வாரியம்
அம்பத்துார் 'மெகா' பள்ளம் சீரமைப்பு பணியில் வாரியம்
அம்பத்துார் 'மெகா' பள்ளம் சீரமைப்பு பணியில் வாரியம்
ADDED : ஆக 18, 2025 11:55 PM

அம்பத்துார், அம்பத்துார், மேனாம்பேடு, கருக்கு பிரதான சாலையில் நேற்று முன்தினம் பிற்பகலில், திடீரென மெகா பள்ளம் ஏற்பட்டது. அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபர் பைக்குடன் பள்ளத்தில் விழுந்தார். மேலும், லாரி ஒன்றும் பள்ளத்தில் சிக்கி கொண்டது.
சாலைக்கு அடியில் செல்லும் கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், மண் சரிவு ஏற்பட்டு சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து, போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரிய ஊழியர்கள், பள்ளம் ஏற்பட்ட இடத்தில் உள்ள கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். பள்ளத்தில் தேங்கியிருந்த கழிவு நீரை மெட்ரோ ஊழியர்கள் அகற்றினர்.
பின், அங்கு மணல் மற்றும் சிமென்ட் கலவையை கொட்டி, நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்றும் பணிகள் தொடர உள்ள நிலையில், நாளை முதல் அப்பகுதியில் போக்குவரத்து சீராகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.