sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

12,000 லிட்டர் லாரி குடிநீர் வாங்க வாரியம் நெருக்கடி!: ஆன்லைன் முன்பதிவு முறையிலும் மாற்றம்; சிறு குடியிருப்பில் வசிப்போர் திண்டாட்டம்

/

12,000 லிட்டர் லாரி குடிநீர் வாங்க வாரியம் நெருக்கடி!: ஆன்லைன் முன்பதிவு முறையிலும் மாற்றம்; சிறு குடியிருப்பில் வசிப்போர் திண்டாட்டம்

12,000 லிட்டர் லாரி குடிநீர் வாங்க வாரியம் நெருக்கடி!: ஆன்லைன் முன்பதிவு முறையிலும் மாற்றம்; சிறு குடியிருப்பில் வசிப்போர் திண்டாட்டம்

12,000 லிட்டர் லாரி குடிநீர் வாங்க வாரியம் நெருக்கடி!: ஆன்லைன் முன்பதிவு முறையிலும் மாற்றம்; சிறு குடியிருப்பில் வசிப்போர் திண்டாட்டம்

1


UPDATED : ஜன 08, 2026 10:28 PM

ADDED : ஜன 08, 2026 05:07 AM

Google News

UPDATED : ஜன 08, 2026 10:28 PM ADDED : ஜன 08, 2026 05:07 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநகராட்சி வரி விதிப்பு அடிப்படையில், குடிநீர் வினியோகம் செய்வதாகக் கூறி, சென்னையில், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ள சிறு குடிருப்புகளுக்கு, 6,000 லிட்டர், 9,000 லிட்டர் கொள்ளளவு உள்ள லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய, குடிநீர் வாரியம் மறுத்து வருகிறது. தேவையில்லை என்றாலும், 12,000 லிட்டர் குடிநீருக்கு பதிவு செய்யும் வகையில் நெருக்கடி தரப்படுவதால், பல ஆண்டுகளாக சிறிய தொட்டி கட்டி வைத்துள்ள குடியிருப்பு மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில், தினமும் 120 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், 110 கோடி லிட்டர் குடிநீர், 6,250 கி.மீ., துாரம் கொண்ட குழாய் வழியாகவும், 10 கோடி லிட்டர் குடிநீர், 450 லாரிகள் வழியாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

குடிநீர் வாரியத்திடம், 18,000 லிட்டர் கொள்ளளவு உள்ள 16 லாரிகள், 12,000 லிட்டரில் 34 லாரிகள், 9,000 லிட்டரில் 203 லாரிகள், 6,000 லிட்டரில் 197 லாரிகள் உள்ளன. விரிவாக்க பகுதிகளில், அதிக லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குடிநீர் வாரியம் சமீபகாலமாக, 6,000 மற்றும் 9,000 லிட்டர் லாரிகளில், முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, 5 முதல் 10 வரை உள்ள வீடுகளில், 6,000 முதல் 10,000 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன. அதில் உள்ள இருப்பு நீரை பொறுத்து, லாரி குடிநீரை வாங்குகின்றனர்.

சில வாரங்களாக, குடிநீர் வாரிய இணையதளத்தில், 5 வீடுகள் வரை கொண்ட குடியிருப்பாக இருந்தால், 6,000, 9,000 லிட்டர் லாரிகள் வழியாக, குடிநீர் முன்பதிவு செய்ய முடியவில்லை என, வீட்டு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

நடவடிக்கை



இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:

தனி வீடு மற்றும் ஐந்து வீடுகள் வரை இருந்தால், 6,000, 9,000 லிட்டர் லாரி குடிநீர் பெறும் வகையில், சென்னை குடிநீர் வாரிய ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடிந்தது.

தற்போது, தனி வீடுகளுக்கு, 6,000 லிட்டர் லாரி குடிநீர் கிடைப்பதில்லை; ஆன்லைனில், அதற்கான முன்பதிவு வசதி அகற்றப்பட்டு விட்டது.

அந்த அளவில் தேவையில்லை என்றாலும், ஐந்து வீடாக இருந்தால், 12,000, 18,000 லிட்டர் லாரிக்கு தான் முன்பதிவு செய்ய முடிகிறது. இதனால், பல ஆண்டுகளாக குறைந்த கொள்ளளவு தொட்டி கட்டி வைத்தவர்கள், அதற்கு ஏற்ப லாரி குடிநீர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பழைய வீடுகளில், பெரிய கொள்ளளவில் தொட்டி கட்டவும் முடியாது. தொட்டி 9,000 லிட்டராக இருந்தால், 12,000 லிட்டர் லாரி வாங்கும்போது, 3,000 லிட்டர் குடிநீரை வாரிய ஊழியர்கள் முறைகேடாக விற்க வாய்ப்புள்ளது.

இதுபோன்ற குழப்பங்களுக்கு தெளிவு ஏற்படுத்தும் வகையில், மக்களின் தேவைக்கு ஏற்ப, லாரி குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகராட்சி பகுதிகளில், 6,000, 12,000 லிட்டர் கொள்ளவு லாரிகள் அதிகம் உள்ளன.

அனைத்து வீடுகளுக்கும் சமமாக குடிநீர் வினியோகம், போக்குவரத்து நெரிசல், காலதாமதம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

வினியோகம்


தனி வீடாக இருந்தால், அவர்கள் கேட்கும் லிட்டரில் குடிநீர் கிடைக்கும். அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தால், 12,000, 18,000 லிட்டர் லாரிகளில் குடிநீர் வினியோகிக்கிறோம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தால், அதை அடுக்குமாடி குடியிருப்பாக கணக்கிட்டு, மாநகராட்சி வரி விதிக்கிறது. அதன் அடிப்படையில், குடிநீர் வினியோகமும் செய்யப்படுகிறது.

மாநகராட்சி வரி விதிப்பில், 5, 10 வீடுகள் வரை கொண்ட குடியிருப்பை, தனியாக குறியீடு செய்து அனுப்பினால், அதற்கு ஏற்ப, 6,000, 9,000 லிட்டர் குடிநீர் வினியோகிக்க முடியும்.

ஒரு தொட்டியில் நிரப்பிய பின் மீதமாகும் குடிநீரை முறைகேடாக விற்க முடியாது. லாரிகளை ஜி.பி.எஸ்., வாயிலாக கண்காணிப்பதால், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Image 1518647

-நமது நிருபர்-






      Dinamalar
      Follow us