/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாயில் மிதந்த மூதாட்டியின் சடலம் மீட்பு
/
கால்வாயில் மிதந்த மூதாட்டியின் சடலம் மீட்பு
ADDED : டிச 04, 2024 12:36 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, பின்னி கால்வாயில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக, நேற்று காலை 10:00 மணியளவில் புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்தனர்.
இதில், புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த மங்கலட்சுமி, 65, என்பது தெரிய வந்தது. கணவர் இறந்த நிலையில், மகள் வழி பேரனான கருணாகரன் வீட்டில் இருந்துள்ளார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், நேற்று காலை 7:30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் கால்வாயில் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
பிரேத பரிசோதனைக்காக மங்கலட்சுமி உடல், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புளியந்தோப்பு போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.