/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5 நாளுக்கு பின் மாயமான சிறுமி சடலமாக மீட்பு
/
5 நாளுக்கு பின் மாயமான சிறுமி சடலமாக மீட்பு
ADDED : ஜன 22, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர்: இடைக்கழிநாடு பேரூராட்சி, சேம்புலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஹாசினி, 13, என்ற சிறுமி, கடந்த 17ம் தேதி மாலை, கடப்பாக்கம் கடல் முகத்துவாரம் பகுதியில் குளித்தபோது மாயமானார்.
இந்நிலையில் நேற்று காலை, மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் பகுதியில் அடையாளம் தெரியாத சிறுமி சடலம் கடலில் மிதந்துள்ளது. மீனவர் 'வாட்ஸாப்' குழு தகவலின் படி, பூம்புகார் அருகே பெருந்தோட்டம் பகுதி யில்இருந்து சிறுமி ஹாசினியின் சடலத்தை கடலோர காவல்படையினர் மீட்டனர்.