/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர்களில் ஒருவர் சடலமாக மீட்பு
/
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர்களில் ஒருவர் சடலமாக மீட்பு
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர்களில் ஒருவர் சடலமாக மீட்பு
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர்களில் ஒருவர் சடலமாக மீட்பு
ADDED : அக் 28, 2025 02:12 AM
மணலிபுதுநகர்: கொசஸ்தலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றொருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாதவரம், பர்மா காலனியைச் சேர்ந்த ராஜா, 52, எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 45. இருவரும் நாப்பாளையத்தில் உள்ள தனியார் கிடங்கில் பணி புரிந்தனர்.
கடந்த, 25ம் தேதி மாலை நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து, நாப்பாளையம் கொசஸ்தலை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு, ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு நீந்துவோருக்கு, 500 ரூபாய் தருவதாக, பந்தயம் கட்டியுள்ளனர்.
ராஜா மற்றும் கிருஷ்ணமூர்த்தி துணிச்சலாக, கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் நீந்தியுள்ளனர். பாதி துாரம் சென்ற நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் இருவரும் அடித்து சொல்லப்பட்டு மாயமாகினர்.
கடந்த இரு நாட்களாக, மணலி தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடி வந்த நிலையில், நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி மணலிபுதுநகர், வடிவுடையம்மன் நகர் ஆற்றுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். ராஜாவை தீயணைப்பு நிலைய வீரர்களுடன் மணலிபுதுநகர் போலீசார் தேடி வருகின்றனர்.

