/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாய்லர் வெடித்து விபத்து: ஒருவர் பலி
/
பாய்லர் வெடித்து விபத்து: ஒருவர் பலி
ADDED : பிப் 01, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிக்கரணை, பள்ளிக்கரணையில் செயல்படும் பிரபல துணிக்கடையின் ஊழியர்கள் தங்கும் விடுதி, ஜெயச்சந்திரா நகர் 9வது தெருவில், அமைந்துள்ளது.
கடந்த மாதம், 30ம் தேதி காலை தரைதளத்தில் உள்ள உணவகத்தின் பாய்லர், பலத்த சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில், சமையலர் பன்னீர்செல்வம், 40, படுகாயமடைந்தார். மேலும், இருவர் லேசான காயங்களுடன் உயர் தப்பினர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பன்னீர்செல்வம், நேற்று உயிரிழந்தார். பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.