/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுராந்தகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
/
மதுராந்தகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
ADDED : பிப் 14, 2026 05:35 AM

மதுராந்தகம்: மதுராந்தகம், கருங்குழி பேரூராட்சியில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், இளைஞர்கள் நான்கு பேர், 'கேரம் போர்டு' விளையாடி உள்ளனர். அங்கு மதுபோதையில் வந்த, புகழேந்தி, 19, என்பவர், அவர்கள் மீது நான்கு நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளார். இதில், மூன்று வெடித்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விசாரித்த மதுராந்தகம் போலீசார், புகழேந்தியை கைது செய்தனர். சமூக வலைதளத்தில் வந்த வீடியோவை பார்த்து, நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தெரிய வந்தது.
ரூ.2 லட்சம் கருவிகள் திருட்டு
அம்பத்துார்: பாடி, சத்தியவதி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 32. இவர், அம்பத்துார் தொழிற்பேட்டை முதல் தெருவில், நண்பர் பிரகாஷ் என்பவருடன் சேர்ந்து 'ஆஸ்ட்ரா பிரிசிஷன் டைஸ்' என்ற பெயரில் அச்சு நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, நிறுவனத்தின் ஷட்டர் உடைக்கப்பட்டு, கட்டர், அளவீட்டு கருவி உட்பட 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயுள்ளது. அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தொடர் வழிப்பறி மூவர் கைது
மாதவரம்: புழல், மாதவரம் பகுதிகளில், தொடர் மொபைல் போன் பறிப்பு, வழிப்பறியில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், 24, முகமது ஷெரீப், வினோத், 19 ஆகியோர், நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள், செவ்வாய்பேட்டையில் 'யமஹா ஆர்15' பைக்கை திருடி, வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
பணம் பறித்த வழக்கில் இருவர் கைது
வேளச்சேரி: வேளச்சேரியில் 'மந்த்ரா' என்ற பெயரில் மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 7ம் தேதி இரவு எட்டு பேர் கும்பல், பெண் ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி, 6 சவரன் நகைகள், ஏழு மொபைல் போன்களை பறித்து சென்றனர். இந்த வழக்கில், வேளச்சேரி போலீசார் நான்கு பேரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த, திருவண்ணாமலை, வந்தவாசியை சேர்ந்த கிரிதரன், 31, காஞ்சிபுரம் உத்திரமேரூரை சேர்ந்த லோகேஷ், 30, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
மாமூல் வாங்கிய ரவுடிகள் 2 பேர் கைது
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, ஆடுதொட்டி பகுதிக்கு வரும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த புளியந்தோப்பு, ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன், 22, பரத்குமார், 35 ஆகியோரை, போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

