/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : நவ 03, 2025 01:29 AM
சென்னை: சென்னையின் பிரதான ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் இரவு மொபைல் போனில் தொடர்பு கொண்டு நபர் ஒருவர் பேசி உள்ளார். சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
உடனே, இது குறித்து ரயில்வே போலீஸ் அதிகாரிகளுக்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன.
விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் மூன்று இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரின் மொபைல் போன் எண்ணை வைத்து, போலீசார் விசாரித்தனர்.
இதில், பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சோமு என்பவரின் பெயரில் 'சிம் கார்டு' பதிவாகி இருந்தது.
மேலும், அவர் குறித்து விசாரித்தபோது, தற்போது உடல் நிலை சரியில்லாமல் சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில், கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது.
அவரிடம் விசாரித்ததில், தான் யாருக்கும் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசவில்லை எனக்கூறியுள்ளார். மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

