/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கவர்னர் மாளிகை, முன்னாள் முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
கவர்னர் மாளிகை, முன்னாள் முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
கவர்னர் மாளிகை, முன்னாள் முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
கவர்னர் மாளிகை, முன்னாள் முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 18, 2025 03:43 AM
சென்னை, - மெயில் வாயிலாக, கவர்னர் மாளிகை மற்றும் முன்னாள் முதல்வர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழக டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை அலுவலகத்திற்கு, நேற்று மாலை இ - மெயில் ஒன்று வந்தது. அதில், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க., பொதுச் செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி வீட்டிற்கு, வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரண்டு இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், வெடி பொருட்கள் ஏதும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபரின் இ - மெயில் ஐ.டி.,யை பயன்படுத்தி, அவர் யார் என்பது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.