/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூலை 10, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, போலீசார் மோப்ப நாயுடன் சென்று சோதனை செய்தனர்.
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையின் இ - மெயில் முகவரிக்கு, நேற்று மாலை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், கவர்னர் மாளிகையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
மாநகர போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாயுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார், கவர்னர் மாளிகை முழுதும் சோதனை செய்தனர்.
இரண்டு மணி நேர சோதனைக்கு பின், புரளி என தெரிந்தது.