/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 09, 2025 01:20 AM
சென்னை, கவர்னர் மாளிகை மற்றும் தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்திற்கு நேற்று காலை, மர்ம நபர் ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டார்.
'சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் மற்றும் தலைமைச் செயலகத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வெடிக்கும்' எனக்கூறி, இணைப்பை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் இரண்டு இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபரை, புதுக்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.