/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கவர்னர் மாளிகை அருகே ஹோட்டலுக்கு குண்டு மிரட்டல்
/
கவர்னர் மாளிகை அருகே ஹோட்டலுக்கு குண்டு மிரட்டல்
ADDED : நவ 24, 2024 09:10 PM
சென்னை:கிண்டியில், கவர்னர் மாளிகையான ராஜ்பவன் அருகே, 'லெமன் ட்ரீ' நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள், இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, கிண்டி காவல் நிலைய போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் மோப்ப நாய் உதவியுடன் நட்சத்திர ஹோட்டலில் பல மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.
மர்ம பொருள் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என, தெரியவந்தது. இதையடுத்து, கிண்டி போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர். இந்த ஹோட்டலுக்கு இது இரண்டாவது மிரட்டல் என, போலீசார் தெரிவித்தனர்.