ADDED : அக் 06, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், தாம்பரம் அருகே சேலையூரில், சீயோன் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், வெடிகுண்டு வைத்திருப்பதாக, கடந்த 2ம் தேதி அதிகாலை இ- - மெயில் வந்துள்ளது. பள்ளிக்கு விடுமுறை என்பதால், இதை பள்ளி நிர்வாகிகள் யாரும் கவனிக்கவில்லை.
நேற்று முன்தினம் மாலை, அவர்களது கவனத்திற்கு தெரியவர, சேலையூர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசாரின் சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இது குறித்து சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.