ADDED : அக் 09, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மந்தைவெளி, ஆர்.கே., நகர் 4வது தெருவில் செட்டிநாடு ஹரிஷ் வித்யாலயா பள்ளி உள்ளது. நேற்று அதிகாலை 2:00 மணியளவில், பள்ளி அலுவலகத்திற்கு ஆயிரம்விளக்கு எம்.எல்.ஏ., எழிலன் நாகநாதன் பெயரில், இ - மெயில் வந்தது.
அதில், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், 10:00 மணியளவில் வெடிக்கப்போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவலறிந்து அபிராமபுரம் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உத்தமா உதவியுடன், பள்ளி முழுதும் சோதனை மேற்கொண்டனர்.
இரண்டு மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், வெடி பொருட்கள் ஏதும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதற்கு முன், செப்., 9, அக்., 4ம் தேதிகளில், வெவ்வேறு பெயர்களில் இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.