/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமெரிக்க துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
அமெரிக்க துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 03, 2025 12:38 AM
சென்னை, அமெரிக்க துாதரகம், கமலாலயம், நடிகர் எஸ்.வி.சேகர் வீடு ஆகிய இடங்களுக்கு, இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மெரினா காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும், இ - மெயில்கள் வந்தன.
அவற்றில், 'அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துாதரகம், தி.நகரில் உள்ள கமலாலயம், நடிகர் எஸ்.வி.சேகர் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
மூன்று இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். வெடி பொருட்கள் ஏதும் இல்லை; மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.
இ - மெயில் முகவரியை பயன்படுத்தி, அவர் யார்? எங்கு இருந்து அனுப்பி உள்ளார் என்பது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் தொடர்ந்து டி.ஜி.பி., அலுவலக இ - மெயிலுக்கு, பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு மிரட்டல் வருவது வெடிகுண்டு நிபுணர்களை விழிபிதுங்கச் செய்துள்ளது.