/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமெரிக்க துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
அமெரிக்க துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 30, 2025 12:31 AM
சென்னை: மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை இ - மெயில் ஒன்று வந்தது.
அதில், சாந்தோமில் உள்ள பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வீடு, தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீடு, அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துாதரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடங்களில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் நடத்திய தீவிர சோதனையில் எந்தவித வெடிப்பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இ - மெயில் ஐ.டி.,யை வைத்து, மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

