/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 நாடுகளின் துாதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
10 நாடுகளின் துாதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 01, 2025 03:03 PM
சென்னை:
சென்னையில் உள்ள 10 நாடுகளின் துாதரகங்களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது, மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று காலை இ - மெயில் வந்துள்ளது. அதில், 'கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்ததற்கு முழு காரணம் தி.மு.க., முன்னாள் அமைச்சர் தான்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள, ஜெர்மன் துாதரகம், மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ரஷ்ய துாதரகம் உட்பட, சென்னையில் உள்ள 10 நாடுகளின் துாதரக அலுவலகங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மர்ம நபர்கள், 10 நாடுகளின் துாதரங்களை குறிப்பிட்டு, தனித்தனியாக இ - மெயில் அனுப்பி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.
இதில், எந்தவித வெடிப்பொருட்களும் கிடைக்காததால் வெறும் புரளி என, தெரியவந்தது.
மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.