/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுப்பிரமணியசாமி, ரஜினி வீடுகளுக்கு குண்டு மிரட்டல்
/
சுப்பிரமணியசாமி, ரஜினி வீடுகளுக்கு குண்டு மிரட்டல்
சுப்பிரமணியசாமி, ரஜினி வீடுகளுக்கு குண்டு மிரட்டல்
சுப்பிரமணியசாமி, ரஜினி வீடுகளுக்கு குண்டு மிரட்டல்
ADDED : அக் 29, 2025 02:04 AM
சென்னை: பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வீடு உட்பட 10 இடங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை இ - மெயில் ஒன்று வந்தது.
அதில், சாந்தோமில் உள்ள பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வீடு, ஸ்ரீபெரும்புதுார் காங்.,- எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை வீடு மற்றும் அலுவலகம், போயஸ்கார்டனில் உள்ள ரஜினி, தனுஷ் வீடுகளுக்கும், தி ஹிந்து குழும இயக்குநர் என்.ராம் வீடு உட்பட, 10 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து, சம்பந்தப் பட்ட காவல் நிலையத்திற்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன.
சம்பவ இடங்களில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டதில், எந்தவித வெடிப்பொருட்களும் கிடைக்காததால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரின் இ - மெயில் ஐ.டி.,யை வைத்து அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

