/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரண்டு கிளப்புகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
இரண்டு கிளப்புகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : டிச 25, 2024 12:16 AM
சென்னை, சென்னை ஜிம்கானா கிளப் மற்றும் மெட்ராஸ் போட் கிளப்பிற்கு, இ-மெயில் வாயிலாக, நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
அந்த பதிவில், 'திருச்சி மத்திய சிறையில் உள்ள வீரப்பனின் முக்கிய கூட்டாளியும், தமிழ் தேசிய விடுதலைப்படை இயக்க தலைவருமான மாறனை விடுதலை செய்ய வேண்டும்.
டிஎன்: 29, பிஒய் 0952 என்ற பதிவெண் உடைய பேருந்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து, திருவல்லிக்கேணி, அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாயுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள், இரண்டு கிளப்புகளிலும் சோதனை நடத்தினர்.
இதில் எந்தவித வெடிப்பொருட்களும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இரு காவல் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து, மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.
சென்னையில் பள்ளி, கல்லுாரிகளுக்கு, இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கிளப்களுக்கும், இந்த மிரட்டல் துவங்கியுள்ளது.