/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரு விமானங்கள் சேவை மீண்டும் ரத்து
/
இரு விமானங்கள் சேவை மீண்டும் ரத்து
ADDED : நவ 08, 2024 12:16 AM
சென்னை, சென்னையில் இருந்து பெங்களூரு, குவஹாத்தி புறப்படும் விமானங்கள், அதேபோல் கோல்கட்டா, பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின் நான்கு விமானங்கள், நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது.
எந்த முன் அறிவிப்புமின்றி விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், 'புக்கிங்' செய்த பயணியர், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் நேற்றும், சென்னை விமான நிலையத்தில் இருந்து மாலை 6:10 மணிக்கு குவஹாத்தி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், பெங்களூரில் இருந்து மாலை 5:35 மணிக்கு சென்னை வரும் விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டது.
பயணியருக்கு ரத்து குறித்த எஸ்.எம்.எஸ்., முன்கூட்டியே அனுப்பப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், முன்கூட்டியே புக்கிங் செய்த பயணிருக்கு, இது போன்று விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவது, அதிருப்தியை ஏற்படுத்துகிறது.