/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் செய்தியின் பாக்ஸ் மேட்டர்
/
மெட்ரோ ரயில் செய்தியின் பாக்ஸ் மேட்டர்
ADDED : செப் 05, 2025 02:19 AM

கோயம்பேடு - விருகம்பாக்கம் இடையே
மெட்ரோ ரயில் மேம்பால பணி துவக்கம்
கோயம்பேடு சந்தை - விருகம்பாக்கம் இடையே, மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான மேம்பால பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
மாதவரம் - சோழிங்கநல்லுார் தடத்தில், 47 கி.மீ., மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
மாதவரம், ரெட்டேரி, கொளத்துார், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பால பாதையில் பாலம் அமைக்கும் பணி, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால், கோயம்பேடு சந்தை - விருகம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பணிகள் தாமதமாக துவக்கப்பட்டன. தற்போது, மேம்பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மாதவரம் - சோழிங்கநல்லுார் தடத்தில் பெரும்பாலும், மேம்பால பாதை என்பதால், பணிகள் தாமதமின்றி நடக்கின்றன.
ஆரம்பத்தில் கோயம்பேடு சந்தையில் இருந்து ஆழ்வார்திருநகர் வரை, சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. பின், ஓராண்டாக பணிகள் வேகமாக நடந்தன.
இதையடுத்து, கோயம்பேடு சந்தையில் இருந்து விருகம்பாக்கம் வரை அமைக்கப்பட்டு இருந்த, 100க்கும் மேற்பட்ட துாண்களில் ராட்சத கிரேன்கள் அமைத்து, தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளில் அனைத்து பணிகளையும் முடித்து, இந்த தடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.