/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
படிக்கட்டில் தவறி விழுந்த சிறுவன் 'அட்மிட்'
/
படிக்கட்டில் தவறி விழுந்த சிறுவன் 'அட்மிட்'
ADDED : ஏப் 26, 2025 12:14 AM
அண்ணா நகர்,அமைந்தகரை, பாரதிபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த், 38. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது 7 வயது மகன், நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் உட்பட அக்கம் பக்கத்தினர், சுயநினைவின்றி கிடந்த சிறுவனை மீட்டு சோதித்தனர். அப்போது சிறுவனின் காதில் ரத்தம் வடிந்ததால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் உயர் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அமைந்தகரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.