ADDED : மார் 18, 2026 05:20 AM
அ நிறம் | அளவு
ஓட்டேரி: நம்மாழ்வார்பேட்டை, ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன், 50. இவர் வழக்கம்போல, கடந்த 11ம் தேதி வீட்டை பூட்டி, சாவியை ஜன்னலில் வைத்து சென்றுள்ளார்.
மதியம் திரும்பி வந்தபோது, மர்ம நபர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியேறியது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 250 கிராம் வெள்ளி, 52,000 ரூபாய் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து விசாரித்த தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார், திருட்டில் ஈடுபட்ட பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
