/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது
/
மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது
மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது
மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது
ADDED : செப் 08, 2025 06:17 AM
கோயம்பேடு: மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய அலுவலக பெண்கள் உதவி மையத்திற்கு, நேற்று முன்தினம் மாலை அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், மெட்ரோ ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சிரித்தபடியே கூறி, இணைப்பை துண்டித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோயம்பேடு போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். இதில், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, மிரட்டல் விடுத்த மொபைல் போன் எண்ணை வைத்து விசாரித்தனர். இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.
விசாரணையில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்திருக்கும் சிறுவன், சகோதரரின் மொபைல் போனில் இருந்து பேசியதும், எதிர்முனையில் பெண் ஊழியர் பேசியதால், கிண்டலுக்காக வெடிகுண்டு வைத்திருப்பதாக சிரித்தப்படி கூறி இணைப்பை துண்டித்ததும் தெரிய வந்தது. சிறுவனை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.