ADDED : ஜன 17, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,மயிலாப்பூர், நொச்சி நகரில் வசிப்பவர் கவுதம், 26. தனியார் நிறுவன விற்பனையாளர். கடந்த, 14ம் தேதி இரவு, வீட்டிற்கு அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி, மெரினா மணற்பரப்பில் உறங்கி உள்ளார். நள்ளிரவு எழுந்து பார்த்தபோது, மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனம் திருடுபோனது தெரியவந்தது.
புகார் படி வழக்கு பதிவு செய்து, மயிலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நேரு பூங்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்த விஸ்வா, 20 மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்று இருவரையும் கைது செய்து, திருடிய மொபைல் போன் மற்றும் புல்லட் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.